ஜேசு சுந்தரமாறன்
“தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே”
வாக்களியுங்கள்!!! வாய்ப்பளியுங்கள்!!!
.png)
என்னை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்:
பேரன்பிற்குரிய பேராளர்கள் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்களுக்கு ஜேசு சுந்தரமாறனின் அன்பு வணக்கம்.
ஜேசு சுந்தரமாறனாகிய நான் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வரவிருக்கிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இயக்குனர் (Board of Director) பொறுப்பிற்காக போட்டியிடுகிறேன்.
“தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும் தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே”
என்ற நமது புரட்சிக்கவிஞரின் வரிகளைப் பற்றி வாழ்வதால் தேர்தலில் வெற்றி பெற்று தொண்டாற்றிட உங்களின் பேராதரவை வேண்டுகிறேன். இந்த வேளையில் என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
பிறந்தது சென்னை அருகினில், வளர்ந்தது படித்தது தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில், தற்போது வாழ்வது கலிபோர்னியா மாநிலத்தின் வளைகுடாப் பகுதியில். மென்பொருள் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.
ஆற்றியுள்ள தமிழ்ப்பணிகள் மற்றும் சமூகப் பணிகள்:
பள்ளி முதல் கல்லூரி வரை மேடை தோறும் நான் முழங்கிய தமிழால் தமிழ் மொழி என் ஊணுக்குள் கரைந்து உயிருக்குள் நிறைந்து விட்டது. புலம் பெயர்ந்த பின் தமிழ், தமிழர் நலன் மேல் உள்ள வாஞ்சையால் தமிழ் சார்ந்த குழுக்களுடன் கடந்த 9 ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றி வருகிறேன்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு குழுக்களில் பங்காற்றியுள்ளேன்.
இயற்றமிழை வட அமெரிக்க மண்ணில் இயம்பிட "நக்கீரர் பட்டிமன்றக் குழு" என்ற பேச்சுத் தமிழுக்கான மேடை அமைத்து தலைமுறைத் தாண்டிய பேச்சில் சிறந்த ஆளுமைகளை வளர்த்தெடுக்க ஆவண செய்து கொண்டுள்ளேன்.
தமிழரின் தொன்மை, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆவணப்படுத்தி "மெரினா புரட்சி" என்ற படத்தை உலகெங்கும் வெளியிட்டேன் மற்றும் தமிழர்களின் தொன் நிலமாம் குமரிக் கண்டத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படி "குமரிக்கண்டம்" என்ற ஆவணப்படத்தை இயக்கி தயாரித்து வெளியிட்டேன்(Amazon).
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு தமிழ் இருக்கை அமைவதற்கு என்னால் ஆன பணிகளைச் செய்தேன்.
தாய்நாட்டின் ஏறு தழுவுதல் உரிமைக்கான போராட்டங்களில் சமூக ஊடகப் பணியைச் செய்தேன்.
தாய்நாட்டின் ஏறு தழவுதல் உரிமைக்கான போராட்டங்களில் சமூக ஊடகப் பணியைச் செய்தேன்.
பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் வரியோர்க்கு நிதி திரட்டி மக்களின் நலனைக் காக்கும் வாய்ப்பை பெற்றேன்.
ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைக்காக அவர்களின் இடர் காலத்தில் துணை நின்றேன்.
தமிழ்கூறும் நல்லுலகில் எனது பங்களிப்புகளால் எனக்குக் கிடைத்த பட்டறிவின் வாயிலாக அனைவரையும் அரவணைத்து பேரவையின் இயக்குநர்களில் ஒருவராக எவ்வித சார்பும் இன்றி பேரவை விதிகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்றும் மேலும் எனது தனித்திறன் பேரவையின் நலனிற்கு உதவும் வகையில் சிறப்பாகச் செயல்படுவேன் என்றும் உளமாற உறுதி கூறி, உங்களின் பெரும் ஒத்துழைப்பை எனக்கு வாக்களிப்பதன் வழியாகத் தந்திடுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
****************************** வாக்களியுங்கள்!!! வாய்ப்பளியுங்கள்!!! ******************************
பேரவைக்கு போட்டியிடும் சக வேட்பாளர்கள்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இயக்குநராகச் செய்ய விரும்பும் பணிகள்:
"தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!"
-புரட்சிக்கவி பாரதிதாசன்
அமெரிக்கத் தமிழர்களின் பங்கேற்பை அதிகரித்தல்
பேரவையின் இலக்கிய குழு மற்றும் வரலாற்று முன்னெடுப்புகளில் வட அமெரிக்கத் தமிழர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் முன் யோசனை மற்றும் செயல்திட்டம்.
இளைஞர் பேச்சு மேடை விரிவு
இளம் தலைமுறையினரின் பேச்சு மேடையை விரிவு படுத்தி தேசிய அளவில் வெளிச்சம் பெரும் விதமாக தனிப்பெரும் நிகழ்வாக (like spelling bee) முன்னெடுத்தல்.
காணொளி நூலகம்
பேரவையின் "காணொளி நூலகம்" (video library) என்ற கருத்து திட்டத்தை முன்மொழிந்து அதன் வழியாக தமிழ் குறித்தும் தமிழர்கள் குறித்தும் வரலாற்று செய்திகள், ஆய்வுகள் மற்றும் நிலவும் தவறான கருத்துக்களை களையும் நோக்கில் சிறிய குறும்படங்கள், காணொளிகள் தயாரித்து தணிக்கை செய்து வெளியிடுதல்.
தொழில் நுட்பத்திறனை அதிகரித்தல்
- பேரவை செயல்பாடுகளில் தொழில் நுட்பத்திறனை அதிகரித்து விரைவாகவும், வெளிப்படையாகவும் அதன் செயல்பாடுகள், அறிவிப்புகள் பரந்து பட்ட அளவில் சென்று சேர திட்டம் வகுத்து செயல் படுத்துதல்.

வடஅம ெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் ஆற்றியப் பணிகள்:
சாக்ரமெண்டோவில் நடைபெற்ற 36 ஆவது பேரவை விழாவின் (creative Head) படைப்புத் திறன் குழுத் தலைவராகச் செயல்பட்டு விழா சிறக்க உதவினேன்.
36 ஆவது பேரவை விழாவில் மலர்க் குழு, சந்தைப்படுத்துதல் குழு ,காணொளி கேட்பொலி குழு மற்றும் சங்கங்களின் சங்கமம் குழுக்களின் செயல்பாட்டாளராக பணியாற்றினேன்.
பேரவை மற்றும் வளைகுடா பகுதி தமிழ்ச் சங்கம், சேக்ரமெண்டோ தமிழ்ச் சங்கங்களின் வழியாக இளைய தலைமுறையினருக்கு தமிழ்ப் பேச்சுப் பட்டறை நடத்தி அவர்கள் வெற்றி பெற வழி வகுத்தேன்.
பேரவையின் 36 ஆவது பேரவை விழாவின்(FeTNA 36th Convention) படைப்புத்திறன் குழுவின் தலைவராக (Convention Creative Head ) இருந்து விழாவிற்கான அறிவிப்புகள், சுற்றோலைகள், காணொளிகள (promo), மேடை மின்னணு திரையின் காட்சி வடிவமைப்பு என்று சிறப்புற பணிகள் செய்தது.
கடந்த 5 ஆண்டுகளாக பேரவையின் இலக்கிய குழுவின் உறுப்பினராக இருந்து, 45 ற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களை நடத்த குழுவோடு இணைந்து ஒருங்கிணைப்பு, திட்டமிடல், சுற்றோலை தயாரிப்பு, வழி நடத்துதல், பங்கேற்பு, போன்ற பணிகளைச் சிறப்பாக செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இலக்கியத் திருவிழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவராக இருந்து நிகழ்வு சிறக்க பெரும் பங்காற்றியது.
பேரவையின் தமிழ் கூறும் தலைமுறை வழியாக 50 க்கும் அதிகமான இளம் தலைமுறையினரின் பேச்சாற்றலை வளர்க்கவும் வெளிக்கொணரவும் தொடர்ந்து பணியாற்றுவது, அவர்களுக்கு வழிகாட்டியாக, நடுவராக இருந்து ஊக்குவிப்பது.
பேரவையின் விழாக்களில் தொழில் நுட்ப உதவிகளை செய்வது, பேரவை கூட்டங்களில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று செயலாற்றி வருவது.
பேரவையின் பல்வேறு குழுக்களில், குறிப்பாக இலக்கியக் குழு, தமிழ் கூறும் தலைமுறை, தொன்மை தொடக்கம் தொடர்ச்சி, மயிலே மயிலே, மலர்க் குழு, அருவிக் குழு, வணக்கம் வட அமெரிக்கா என தொடர்ந்து கடந்து 5 ஆண்டுகளாக முழு மூச்சாக தொண்டாற்றி வருகிறேன்.

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மற்றும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தில் செய்த பணிகள்:
2016 முதல் சேக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளிலும், முன்னெடுப்புகளிலும், பின்னணியிலும் செயல்பட்டு (தயாரிப்புப் பணிகள், வாசகர் வட்டம். மின்னிதழ்) (ஒருங்கிணைப்பு, தொகுத்து வழங்குதல், நிகழ்ச்சி பங்கேற்பு) தொடர்ந்து செயலாற்றி வருவது.
சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் 25 வது ஆண்டு வெள்ளி விழா பணிகளில் ஈடுபட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, காணொளி மற்றும் சுற்றோலை தயாரிப்பு பணிகளில் முழுமூச்சாக பணியாற்றியது.
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் சங்கம், மற்றும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றங்களுக்கு இளம் தலைமுறையினரின் பேச்சாற்றல் வளர கோடைக் கால பயிற்சிப் பட்டறை நடத்தி, தேசிய அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் பரிசு பெற வைத்தது.
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் மலர்க் குழுவின் ஆசிரியராக, பட்டிமன்ற நிகழ்வின் வழிகாட்டியாக இருந்து அனைத்தையும் ஒருங்கிணைத்தது.
- பேரிடர் மற்றும் கோவிட் தொற்று காலத்தில் தமிழகம் மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு நிதி திரட்டல் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி உதவியது.
கலை இலக்கிய பணிகள்:
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
ஈங்கமரர் சிறப்புக் கண்டார்."
கலைச் சேவை
ஆவணப்படம், குறும்படம்
தனிப்பாடல்






தமிழ் மேடை
பட்டி மன்றம்
கருத்துக்களம்
விவாத மேடை






பேரவை துளிகள்
ஒருங்கிணைப்பு
பங்கேற்பு
தொடர்பு




